‘‘கதாநாயகர்களை மனதில் வைத்து கதை எழுத மாட்டேன்’’- டைரக்டர் ராஜமவுலி

‘‘கதாநாயகர்களை மனதில் வைத்து கதை எழுத மாட்டேன்’’ என்று டைரக்டர் ராஜமவுலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

Update: 2021-12-15 12:36 GMT
‘பாகுபலி’ என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர், இயக்குனர் ராஜமவுலி. இவர், தற்போது தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் ராஜமவுலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘தமிழகத்தில் உங்களுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. நீங்கள் நேரடியாக ஒரு தமிழ் படம் எடுப்பீர்களா?’, என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘‘நான் யோசிப்பது தெலுங்கில் தான். அதை மொழிபெயர்த்து தர நல்ல நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இயக்குனராக அது சரியாக இருக்காது’’, என அவர் பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘நான் எந்த ஹீரோ எனக்கு கால்ஷீட் கொடுக்கிறார் என பார்த்துவிட்டு அதற்காக கதை எழுதமாட்டேன். முதலில் கதையை எழுதி முடித்துவிட்டு அதற்கு பிறகு தான் எந்த ஹீரோ சரியாக இருப்பார்? என முடிவெடுத்து போய் கேட்பேன்.’’ என்றார்.

மேலும் செய்திகள்