கிரிமினல் அவதூறு வழக்கில் நடிகர் விஜய்சேதுபதிக்கு சம்மன்..!
நடிகர் மகாகாந்தி தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் நடிகர் விஜய்சேதுபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை,
பொது வெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் மகாகாந்தி என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் சேதுபதியை வாழ்த்த வந்தவரை பொதுவெளியில் தாக்கிய விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் வரும் ஜனவரி 4ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சம்மன் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.