குணமடைய பிராத்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி- நடிகர் சிம்பு
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை ,
நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு, தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு கூட்டணி 3-வது முறையாக இந்த படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிம்புவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, நேற்று மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நடிகர் சிம்பு தற்போது அவரது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
Thanks for all your blessings I am back home & recovering 🙏🏻#NeengailaamaNaanilla ❤️
— Silambarasan TR (@SilambarasanTR_) December 12, 2021
இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் , " மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பி விட்டேன் . தற்போது மெல்ல குணமடைந்து வருகிறேன். எனக்காக பிராத்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி " என தெரிவித்துள்ளார் .