புளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்தை சிங்கப்பூரில் வெளியிட தடை..!

புளூ சட்டை மாறன் இயக்கியுள்ள 'ஆன்டி இண்டியன்' திரைப்படத்தை சிங்கப்பூரில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-10 19:20 GMT
சென்னை,

யூடியூப்பில் தமிழ் டாக்கீஸ் என்ற சேனலில் திரைப்படங்களை விமர்சனம் செய்து புகழ்பெற்றவர் புளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படும் இளமாறன். இவர் தற்போது ஆன்டி இண்டியன் என்ற திரைப்படம் மூலம் டைரக்டராக மாறியுள்ளார். 

இந்த திரைப்படத்தில் மாறன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மத அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 10 நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் ஆண்டி இண்டியன் திரைப்படத்தை சிங்கப்பூரில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதால் படத்துக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் தணிக்கை வாரியம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, மறுதணிக்கைக்காக படக்குழுவினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்