விவசாயத்தை கருவாக வைத்து இன்னொரு படம்

விவசாயத்தை கருவாக வைத்து இன்னொரு படம் இம்மாதம் திரைக்குவர இருக்கிறது.

Update: 2021-12-05 09:57 GMT
தமிழ் திரையுலகில் விவசாயிகளையும், விவசாயத்தையும் கருவாக வைத்து எப்போதாவது ஒரு படம் வருகிறது. அந்த வரிசையில் புதுசாக இடம்பெறுகிறது, ‘டைட்டில்’ என்ற படம். விவசாயத்தை மேன்மையாகவும், மண்ணை தெய்வமாகவும் நினைக்கும் ஒரு குடும்பத்துக்கும், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வாங்கி கொடுக்கும் கும்பலுக்கும் இடையே நடைபெறும் உணர்ச்சிகரமான போராட்டமே இந்த படத்தின் கதை. 

விவசாயத்தை விரும்பாத இளைஞராக கதாநாயகன் விஜித் நடித்து இருக்கிறார். கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மைம்கோபி, மாரிமுத்து, ரோபோ சங்கர், ரேகா, மதுமிதா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். ரகோத் விஜய் டைரக்டு செய்து இருக்கிறார். டில்லிபாபு தயாரித்து இருக்கிறார். இம்மாதம் படம் திரைக்குவர இருக்கிறது.

மேலும் செய்திகள்