ஜி.வி. பிரகாஷின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2021-12-02 11:41 GMT
சென்னை

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேச்சிலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இடி முழக்கம் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா மற்றும் சிவி குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு 'ரிபெல்' (Rebel) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்க இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கெனவே பிரபாஸ் நடிப்பில் ரிபெல் என்ற தெலுங்கு திரைப்படம் 2012-ம் ஆண்டு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்