“எனக்கு நிறைய முறை காதல் வந்து இருக்கிறது” - நடிகை ராய் லட்சுமி
தனக்கு நிறைய முறை காதல் வந்து இருப்பதாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்தார்.
ஜெய், ராய் லட்சுமி, கேதரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ள புதிய படம் நீயா-2. எல்.சுரேஷ் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீதர் தயாரித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராய் லட்சுமி கூறியதாவது:-
“நான் சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தியில் ஜூலி படத்தில் நடிக்க எடையை குறைக்கும்படி இயக்குனர் சொன்னதால் பால், சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்தி அரிசி உணவுகளையும், உருளை கிழங்கையும் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து 75 கிலோவாக இருந்த எடையை 59 கிலோவாக குறைத்தேன்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எனது வாழ்க்கையில் நிறைய முறை காதல் வந்துபோய் இருக்கிறது. நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். நீயா-2 படம் சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் எல்.சுரேஷ் கடுமையாக உழைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். நிறைய கிராபிக்ஸ் காட்சிகளும் இருக்கும்.
இதில் நடிக்கும்போது எனக்கும் கேதரின் தெரசா, வரலட்சுமி ஆகியோருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அடுத்து சின்ட்ரல்லா, மிருதன்-2 கன்னடத்தில் ஜான்சி உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறேன். ஜெய், அஞ்சலி இருவரும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதல் ஒரு படத்திலேயே முடிந்துவிட்டது.
‘மீ டூ’ இயக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் போகப்போக அதை தவறாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் அதன்மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.” இவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.