திலீப்பின் சொத்துகள் முடக்கம்?

நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்துள்ள போலீசார் கூறியதாவது:–

Update: 2017-07-12 23:15 GMT

கொச்சி,

நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்துள்ள போலீசார் கூறியதாவது:–

திலீப் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஓட்டல் தொழில் மூலம் எவ்வளவு வருமானம் பெறுகிறார் என்பதை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம்.

2 வருடங்களுக்கு முன்பு மலையாள திரையுலகினரின் கருப்பு பண பதுக்கல் விவகாரம் குறித்து வருமான வரித்துறை ஆய்வுசெய்து விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது. இதில் திலீப்பிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை தொடங்கி, பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வருமான வரித்துறை மீண்டும் இதுபற்றி தீவிர விசாரணையை தொடங்க இருக்கிறது.

துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் கருப்பு பண பதுக்கல் கும்பலுடன் திலீப்புக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நடிகை கடத்தல் வழக்குடன் கருப்பு பண விவகாரமும் பூதாகரமாக வெடித்து இருப்பதால் திலீப்பின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்