உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அணிகளின் தற்போதைய நிலை என்ன? - விவரம்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

Update: 2024-07-13 02:53 GMT

Image Courtesy: AFP 

துபாய்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நிறைவு பெற்ற பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:

1. இந்தியா - 68.52 சதவீதம்

2. ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம்

3. நியூசிலாந்து - 50.00 சதவீதம்

4. இலங்கை - 50.00 சதவீதம்

5. பாகிஸ்தான் - 36.66 சதவீதம்

6. வெஸ்ட் இண்டீஸ் - 26.67 சதவீதம்

7. தென் ஆப்பிரிக்கா - 25.00 சதவீதம்

8. வங்காளதேசம் - 25.00 சதவீதம்

9. இங்கிலாந்து - 25.00 சதவீதம்

Tags:    

மேலும் செய்திகள்