இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..? வெளியான அறிவிப்பு

இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2024-08-08 07:18 GMT

கோப்புப்படம்

சென்னை.

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

* வரும் 11ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

* 12ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 13 , 14- ந்தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

* சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்