தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Update: 2024-10-05 14:53 GMT

File Photo  : PTI

சென்னை,

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டெம்பர் 30ம் தேதி வரை தென்மேற்குபருவமழை காலம் எனவும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி வரும் 15ம்தேதியையொட்டி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்னிந்தியாவில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்