வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. மேலும் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது;
"தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 5-ந்தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.