இன்று முதல் 13ம் தேதி வரை... தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்தில் இன்று முதல் ஆக. 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு 7 - 11 செ.மீ அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் ஆக. 14ம் தேதி வரை கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.