சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்ச வெப்ப நிலை 35-36 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்த பட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.