தமிழகத்தின் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்துவருகிறது.;

Update:2024-07-27 07:44 IST

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  கோவை, திருப்பூர் மற்றும் தென்காசி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்