தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-01 11:42 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதாவது, நீலகிரி, கோவை, திருவாரூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்