நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.;
சென்னை,
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில்,கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.