இன்றைய பஞ்சாங்கம்
குரோதி வருடம் ஆடி மாதம் 8ம் தேதி புதன்கிழமை
நட்சத்திரம்: இன்று இரவு 10.17 வரை சதயம் பின்பு பூரட்டாதி
திதி: இன்று காலை 11.01 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 9.15 - 10.15
நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45
ராகு காலம் மாலை 12.00 - 1.30
எமகண்டம் காலை: 7.30 - 9.00
குளிகை காலை: 10.30 - 12.00
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டம்: திருவாதிரை, புனர்பூசம்
இன்றைய ராசிபலன்
மேஷம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரித்தாலும் அதனை செவ்வனே முடித்துவிடுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
ரிஷபம்
அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். தம்பதிகள் குடும்பத்திற்காக சில விசயங்களை விட்டுக்கொடுப்பர். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள் . வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கடகம்
குழந்தை பாக்யம் கிடைக்கும். அதற்குண்டான சித்த வைத்திய சிகிச்சை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்தை பெறுவதில் தடைகள் வந்து விலகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
சற்று அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய செலவினை மட்டும் பாருங்கள். எதிர்பாராத வெளியூர் பயணங்கள் உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கன்னி
கலைத்துறையினருக்கு காரியத்தடைகள் ஏற்படும். படம் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. கூடுமானவரை கவனமாக இருக்க வேண்டும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். எண்ணெய் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். மிகவும் முக்கியமான செலவுமட்டும் செய்யவும். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உணவில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
விருச்சிகம்
பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேருவர். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். நினைத்ததை முடிக்கக் கூடிய தினமாக உள்ளது. உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். நீண்ட கால கனவு நனவாகும். மாணவர்களுக்கு தேர்வினைப் பற்றிய அச்சம் தீரும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைக்க வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். அதை சமாளிக்கும் வழி கிடைக்கும். உடல் நிலை சீராகும். நண்பர்கள் உதவுவர். புதிய தொழில் துவங்குவீர்கள். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கும்பம்
மறைமுக அவமானங்களும் வந்து போகும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, நீங்கும். வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மீனம்
சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். செலவு செய்வதில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்