இன்றைய ராசிபலன் - 12.08.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-08-12 00:46 GMT

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் ஆடி மாதம் 27ம்- தேதி திங்கட் கிழம

நட்சத்திரம் : இன்று காலை 06.39 வரை சுவாதி பின்பு விசாகம்

திதி : இன்று காலை 05.09 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம் : அமிர்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை : 6.15 - 7.15

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 07-30 - 09.00

எமகண்டம் காலை : 10.30 - 12.00

குளிகை மாலை : 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை : 09.15 - 10.15

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 - 8.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி

மேஷம்

மாணவர்கள் பள்ளிப்பாடங்களை முடித்து ஆசிரியரிடம் நற்பெயர் வாங்குவர். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர் பயணம் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு. விட்டுப் போன நட்பை தொடர்வீர்கள். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விருந்து விழா என கலந்து கொள்வீர்கள். பணப் புழக்கம் மிகும். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. உற்சாகம் மிகுந்த நாள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

பணவரவுக்கு பஞ்சமில்லை. நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்ற சில பொருட்களை வாங்கிவிடுவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

சிம்மம்

தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீடு வாங்க கடன் கிடைக்கும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

கன்னி

வியாபாரிகளுக்கு விற்பனை கூடி நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும். கல்வித் தடை நீங்கும். விலகிச் சென்ற தங்கள் நெருங்கிய நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உடல் ஆரோக்கியம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

உறவினர்களால் வந்த சில தொல்லைகள் நீங்கும். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். தான் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரம் சாதகமாக இருக்கும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

திருமணமாகாத முதிர்கன்னிகளுக்கு நல்ல வரண் அமையும். சுபச் செலவுகள் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கறிஞர்களுக்கு புகழ் ஓங்கும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நற்செய்தி வரும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும்.எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். பணப்பிரச்சினை இருக்காது. வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். ஆரோக்கியம் பளிச்சிடும். நினைவுத் திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். ஒரு சிலர் இன்று வங்கியில் டெபாசிட் செய்வர். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்நிறம்

 

Tags:    

மேலும் செய்திகள்