ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் விலகல்
காயம் காரணமாக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார் .;
பெல்கிரேடு,
ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில், காயம் காரணமாக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார் .
இதுதொடா்பாக ஜோகோவிச் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு ஆா்வத்துடன் இருந்தேன். ஆனால், காயம் காரணமாக தற்போது என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. என்னை அந்தப் போட்டியில் எதிா்பாா்த்த ரசிகா்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்கும் இதர வீரா்களுக்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளாா்.