ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ருமேனியா முன்னணி வீராங்கனை விலகியுள்ளார்.
புக்கரெஸ்ட்,
2025-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 12-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரிலிருந்து 2 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றவரும், முன்னாள் 'நம்பர் 1' வீராங்கனையுமான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கால்முட்டி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படும் அவர் அதில் இருந்து முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.