புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன.

Update: 2024-10-26 04:50 GMT

Image Courtesy: @Bengalwarriorz

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் யு மும்பா 9வது இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் 6வது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 11வது இடத்திலும், தபாங் டெல்லி 5வது இடத்திலும் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்