பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டம்: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை தீப்தி

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளது.

Update: 2024-09-03 18:45 GMT

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நேற்று நடந்த 400 மீட்டர் மகளிர் டி20 ஓட்டம் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்