பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.;
பாரீஸ்,
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்றில் இந்திய வீரரான அமன் ஷெராவத், மாசிடோனியா வீரரான விளாடிமிர் எகோரோவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட அமன் ஷெராவத் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.