உலகக் கோப்பை தகுதிச்சுற்று: அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்சி விலகல்
காயம் காரணமாக உருகுவே, பிரேசில் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.;

பியூனஸ் அயர்ஸ்,
உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜென்டினா அடுத்த இரண்டு போட்டிகளில் வருகிற 22-ந்தேதி உருகுவே அணியையும், 26-ந்தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி விளையாட இருந்தார்.
இந்த நிலையில் , காயம் காரணமாக உருகுவே, பிரேசில் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இருந்து மெஸ்சி விலகியுள்ளார். இது அர்ஜென்டினா அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
.