மேஜர் லீக் கால்பந்து: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்...இன்டர் மியாமி அணி வெற்றி

இன்டர் மியாமி அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது.;

Update:2024-10-20 07:58 IST

Image : AFP 

வாஷிங்டன் ,

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி கிளப் போட்டிகளில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி மேஜர் லீக் கால்பந்து தொடரில் ( எம்.எல்.எஸ்.)இன்று நடைபெற்ற போட்டியில் இன்டர் மியாமி அணியும் , நியூ இங்கிலாந்து அணியும் விளையாடின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது.இதனால் ஆட்ட நேர முடிவில் 6-2 என்ற கணக்கில் இன்டர் மியாமி வெற்றி பெற்றது. இன்டர் மியாமி அணியில் கேப்டன் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் .மேலும் அந்த அணியில் லூயிஸ் சுவாரஸ் 2 கோல், பெஞ்சமின் ஒரு கோல் அடித்தனர் . 

Tags:    

மேலும் செய்திகள்