ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

Update: 2024-10-25 02:34 GMT

Image Courtesy: @KeralaBlasters/ @IndSuperLeague

கொச்சி,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பெங்களூரு எப்.சி அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்கள் முடிவில் பெங்களூரு 5 ஆட்டங்களில் 4 வெற்றி, 1 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில், கேரளா அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்