ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் - கேரளா அணிகள் இன்று மோதல்

இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

Update: 2024-10-20 01:20 GMT

கொல்கத்தா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் முகமதன் - கேரளா அணிகள் மோதுகின்றன . இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

முகமதன் அணி 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. கேரளா 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என 6வது இடத்தில் உள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்