ஐ.எஸ்.எல். கால்பந்து; பரபரப்பான ஆட்டத்தில் கேரளாவை வீழ்த்திய பெங்களூரு எப்.சி

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.;

Update:2024-12-07 21:47 IST

Image Courtesy: @IndSuperLeague / @bengalurufc

சென்னை,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. அதில் மாலை 5 மணிக்கு சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணி அசத்தல் வெற்றி பெற்றது. 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு 2 கோல்கள் அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியில் கேரளா அணி கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்த கேரளா 2-2 என சமனுக்கு கொண்டு வந்தது. ஆனால் இந்த சமன் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே பெங்களூரு மேற்கோண்டு ஒரு கோல் அடித்து 3-2 என முன்னிலை பெற்றது.

இறுதிகட்டத்திலும் பெங்களூரு மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்