கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா

அரையிறுதியில் கொலம்பியா - உருகுவே அணியுடன் மோத உள்ளது.

Update: 2024-07-08 12:05 GMT

லாஸ்வேகஸ்,

48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை லாஸ்வேகசில் கால்இறுதியின் கடைசி ஆட்டத்தில் கொலம்பியா - பனாமா அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொலம்பியா 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் உருகுவே அணி, கொலம்பியாவை சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா, கனடாவுடன் மோத உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்