கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் - கொலம்பியா ஆட்டம் 'டிரா'

கோபா அமெரிக்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2024-07-03 07:20 GMT

Image : @CopaAmerica

கலிபோர்னியா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரேசில் - கொலம்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் 12வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரபின்ஹா கோல் அடித்தார்.இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் கோல் அடித்தார். தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என 'டிரா'வில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்