உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேற ஒவ்வொரு அணிக்கும் உள்ள வாய்ப்புகள் விவரம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Update: 2024-10-28 09:55 GMT

image courtesy: ICC

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரசியத்தை கூட்ட ஐ.சி.சி. அறிமுகப்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கவுரவமிக்கதாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி, டிரா ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கான அணிகள் தேர்வாகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்த முதலாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2வது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3வது சீசன் (2023-2025) நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தம் 9 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இந்த சீசனின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு (2025) ஜூன், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற 9 அணிகளுக்குள்ளான வாய்ப்புகள் விவரம் பின்வருமாறு:-

1. இந்தியா - 68.82% புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 6 (நியூசிலாந்துக்கு எதிராக 1, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஒன்றில் தோல்வியடைந்தாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

2. ஆஸ்திரேலியா: 62.50% புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 7(இந்தியாவுக்கு எதிராக 5, இலங்கைக்கு எதிராக 2)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றாலே நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

3. இலங்கை: 55.56% புள்ளிகளுடனும் 3-வது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 4 (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்லும்.

4. நியூசிலாந்து: 50% புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 4 (இந்தியாவுக்கு எதிராக 1, இங்கிலாந்துக்கு எதிராக 3)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: எஞ்சியுள்ள 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும்.

5. தென் ஆப்பிரிக்கா: 47.62% புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 5 (வங்காளதேசத்துக்கு எதிராக 1, இலங்கைக்கு எதிராக 2, பாகிஸ்தானுக்கு எதிராக 2)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: 5 போட்டிகளில் 4-ல் கட்டாயம் வென்றாக வேண்டும்.

6.இங்கிலாந்து - 40.79% புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 3 (நியூசிலாந்துக்கு எதிராக3)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

7. பாகிஸ்தான் - 33.33% புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 4 (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு குறைவுதான்.

8. வங்காளதேசம்: 30.56% புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 3 (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு குறைவுதான்.

9.வெஸ்ட் இண்டீஸ்: 18.52% புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்: 4 (வங்காளதேசத்துக்கு எதிராக 2, பாகிஸ்தானுக்கு எதிராக 2)

இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு விவரம்: எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு குறைவுதான்.

Tags:    

மேலும் செய்திகள்