மகளிர் டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் - ஐ.சி.சி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Update: 2024-08-20 16:08 GMT

கோப்புப்படம் 

துபாய்,

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐ.சி.சி திட்டமிட்டது.

இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துமாறு ஐ.சி.சி கோரிக்கை வைத்தது. ஆனால், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்துவிட்டது. மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார்.

இதையடுத்து யு.ஏ.இ (ஐக்கிய அரபு அமீரகம்) இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் உலகக்கோப்பை தொடர் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில்,மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்