பெண்கள் டி20 உலகக்கோப்பை; டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.

Update: 2024-10-18 13:49 GMT

Image Courtesy: @T20WorldCup

சார்ஜா,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறின.

இதையடுத்து இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சார்ஜாவில் மோத உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்