மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா இடம் பிடித்துள்ளார்.

Update: 2024-08-27 07:44 GMT

Image Courtesy: @BCCIWomen

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

தொடரின் தொடக்க நாளான அக்டோபர் 3ம் தேதி ஷார்ஜாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 4ம் தேதி நியூசிலாந்தை துபாயில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 6-ல் துபாயில் நடக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ (விக்கெட் கீப்பர்), யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்)*, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பட்டீல் *, சஜனா சஜீவன்.

ரிசர்வ் வீரர்கள்: உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர், சைமா தாகூர்

* உடற்தகுதியை பொறுத்து



Tags:    

மேலும் செய்திகள்