பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Update: 2024-10-24 18:07 GMT

அகமதாபாத்,

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 44.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தேஜல் 42 ரன்களும், தீப்தி 41 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் எமிலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. ராதா யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்