ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீராங்கனை
டீன்ட்ரா டாட்டின் மகளிர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.;
டிரினிடாட்,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீராங்கனையான டீன்ட்ரா டாட்டின், திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தார். அதிரடி வீராங்கனையான இவர் மகளிர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இந்நிலையில் தனது ஓய்வு முடிவிலிருந்து மாறியிருக்கும் அவர், மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில்கொண்டு இவர் களத்திற்கு திரும்பவுள்ளார். இவரது வருகை நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வலு சேர்க்கும்.