மயங்க் யாதவ் பந்துவீச்சு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை - ஷாண்டோ பேட்டி

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.;

Update:2024-10-08 15:46 IST

Image Courtesy: AFP

டெல்லி

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக கருதப்படும் மயங்க் யாதவ் அறிமுக வீரராக களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே ஒரு ரன் கூட கொடுக்காத மயங்க் யாதவ் மெய்டனாக பந்து வீசி வங்காளதேசத்துக்கு சவாலை கொடுத்தார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவர் வேகத்தை அதிகரித்து வங்கதேச பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார் என்று நம்பலாம்.

இந்நிலையில், மயங்க் யாதவ் பந்து வீச்சின் வேகம் தங்களுக்கு எந்த விதமான பிரச்சினையையும் உண்டு செய்யாது என வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

அவரை (மயங்க் யாதவ்) போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் வலைப்பயிற்சியில் உள்ளார்கள். எனவே மயங்க் யாதவ் பற்றி நாங்கள் அதிகமாக கவலைப்படுவோம் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் அவர் நல்ல பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்