பெங்களூருவுக்கு எதிரான வெற்றி: ஆக்ரோஷமாக கொண்டாடிய கே.எல்.ராகுல்.. வீடியோ
பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற்றது.;
க்பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் தலா 37 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 93 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்த வெற்றியை கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.