இந்தியர்களுக்கு எங்களை வீழ்த்துவது மிகவும் பிடிக்கும் - ஆஸ்திரேலிய வீரர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

Update: 2024-09-09 16:14 GMT

image courtesy: AFP

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியர்கள் விரும்புவார்கள் என்று அந்த அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,"கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிரண்டு இடங்களில் இருந்து வரும் அணிகளாகவே இருந்து வருகிறோம். மேலும் கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டோம். இந்திய அணிக்கு எதிரான போட்டி எப்பொழுதும் பெரியதாக அமைகிறது. இந்த விஷயத்தை நான் மரியாதைக்குரிய ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன். எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வந்திருக்கிறோம். மேலும் எங்களுக்கென ஒரு மரபும் பாரம்பரியமும் நற்பெயரும் இருக்கிறது. இப்போது இந்தியர்களுக்கு ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது வழக்கமாக மாறி இருக்கிறது. ஐபிஎல் தொடர் எழுச்சிக்குப் பிறகு இது நடக்க தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு முறை அவர்கள் இங்கு வந்த பொழுது எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள். மேலும் இந்தியாவுக்கு எதிராக நாங்களும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அவர்களிடத்தில் பெற்றுள்ளோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்