சி.எஸ்.கே அணிக்கு இந்த சீசன் முடிந்து விட்டது - இந்திய முன்னாள் வீரர்

சென்னை இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.;

Update:2025-04-21 13:48 IST

Image Courtesy: @IPL / @ChennaiIPL

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

5 முறை சாம்பியனான சென்னை இம்முறை பேட்டிங்கில் தடுமாறுவதே இந்த மோசமான செயல்பாடுகளுக்கு காரணம். பேட்ஸ்மேன்கள் ஒருவரு கூட அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்காதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மீதமுள்ள 6 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். எனவே, சி.எஸ்.கே இனி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம்தான். இந்நிலையில், சி.எஸ்.கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, சி.எஸ்.கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. நன்றாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் பந்தை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்க விட்டதைப் பார்த்தது விருந்தாக அமைந்தது.

மீதமுள்ள ஆட்டங்களுக்காக சி.எஸ்.கே அணிக்கு என்னுடைய ஒரே ஆலோசனை என்னவெனில் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி விளையாட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்