ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர்தான் - இந்திய முன்னாள் வீரர் தேர்வு
18-வது ஐ.பி.எல். சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது.;

மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
இந்த தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகீர்கானிடம் ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார்? என்று மலிங்கா, பிராவோ, புவனேஷ்வர் குமார், பும்ரா, சந்தீப் சர்மா உள்ளிட்ட சில வீரர்களை ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது.
அவர்களில் ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக 'ஜஸ்பிரித் பும்ரா'-வை அவர் தேர்வு செய்துள்ளார்.
இதில் பிராவோ, புவனேஷ்வர் குமார் மற்றும் மலிங்காவை விட ஐ.பி.எல்.-ல் பும்ரா குறைந்த விக்கெட்டுகள் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.