ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; போட்டி அட்டவணை வெளியிட்ட இலங்கை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.;
கொழும்பு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் ஒரு போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முதலில் டெஸ்ட் போட்டிகளும் அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டும் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 - பிப்ரவரி 2 வரையும், 2வது போட்டி பிப்ரவரி 6-10 வரையும், ஒருநாள் போட்டி பிப்ரவரி 13ம் தேதியும் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிகள் காலேவில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிக்கான மைதானம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை-ஆஸ்திரேலியா தொடர் விவரம்;
முதல் டெஸ்ட் போட்டி - ஜனவரி 29 - பிப்ரவரி 2 (2025) - காலே
2வது டெஸ்ட் போட்டி - பிப்ரவரி 6-10 (2025) - காலே
ஒருநாள் கிரிக்கெட் - பிப்ரவரி 13 - மைதானம் பின்னர் அறிவிக்கப்படும்.