தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; ஷகிப் அல் ஹசன் விலகல் - காரணம் என்ன..?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-10-18 10:48 GMT

Image : AFP

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இந்த தொடர் வரும் 21ம் தேதி டாக்காவில் தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணியில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையின் போது ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. அதன் காரணமாக அவர் வெளிநாட்டிற்கு சென்றார். அதன் பின்னர் அவர் சொந்த நாடு திரும்பவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷகிப் அறிவித்திருந்தார்.

அதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், வங்காளதேசத்தில் அவருக்கு எதிராக நிலவி வரும் சூழ்நிலை காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 23 வயதான ஹசன் முராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்