ஆஸ்திரேலிய ஏ-க்கு எதிரான டெஸ்ட்; மீண்டும் சொதப்பிய ராகுல், கெய்க்வாட் - 2ம் நாள் முடிவில் இந்தியா ஏ 73/5

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-11-08 10:43 GMT

Image Courtesy: @BCCI / AFP

மெல்போர்ன்,

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி(4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்சில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் கெய்க்வாட் மற்றும் ராகுல் தலா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் நேசர் 4 விக்கெட்டுகளும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ முதல் நாளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்திருந்தது. இந்நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ தனது முதல் இன்னிங்சில் 223 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா ஏ தரப்பில் மார்கஸ் ஹாரிஸ் 74 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஈஸ்வரன் 17 ரன்னிலும், ராகுல் 10 ரன்னிலும், அடுத்து வந்த சாய் சுதர்சன் 3 ரன்னிலும், கெய்வகாட் 11 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து துருவ் ஜூரெல் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சில் 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா ஏ தற்போது வரை 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்