சையத் முஷ்டாக் அலி கோப்பை; சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.80 லட்சம் பரிசு

17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-12-17 00:56 GMT

Image Courtesy: @BCCIdomestic

மும்பை,

17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

மும்பை அணியை பாராட்டிய மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அஜிங்யா நாயக், அணிக்கு ரூ.80 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்