சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; வங்காளதேச வீரர் மஹ்மதுல்லா அறிவிப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்காளதேச வீரர் மஹ்மதுல்லா அறிவித்துள்ளார்.

Update: 2024-10-09 22:21 GMT

Image Courtesy : AFP

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், வங்காளதேச அணி வீரர் மஹ்மதுல்லா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள மஹ்மதுல்லா, பேட்டிங்கில் 2,394 ரன்களையும், பந்துவீச்சில் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்