ரஞ்சி டிராபி; அசாமுக்கு எதிரான ஆட்டம்...முதல் நாள் முடிவில் தமிழகம் 299/7

தமிழகம் தரப்பில் முகமது அலி 27 ரன்னுடனும், சோனு யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Update: 2024-11-06 18:25 GMT

image courtesy: @TNCACricket

கவுகாத்தி,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 4வது லீக்கில் கவுகாத்தியில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் தமிழகம் - அசாம் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தமிழக அண்யின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லோகேஷ்வர் 8 ரன்னிலும், ஜெகதீசன் 5 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து விஜய் சங்கர் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி சேர்ந்தனர். இதில் பிரதோஷ் ரஞ்சன் பால் 27 ரன்னில் அவுட் ஆனார்.

தொடர்ந்து விஜய் சங்கருடன், ஆண்ட்ரே சித்தார்த் ஜோடி சேர்ந்தார். விஜய் சங்கர் - ஆண்ட்ரே சித்தார்த் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரிஅசதம் அடித்த நிலையில் அவுட் ஆகினர். இதில் விஜய் சங்கர் 76 ரன்னிலும், ஆண்ட்ரே சித்தார்த் 94 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஷாரூக் கான் 28 ரன், சாய் கிஷோர் 3 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் 7 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது. தமிழகம் தரப்பில் முகமது அலி 27 ரன்னுடனும், சோனு யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்