ஒருநாள் கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.;

Update:2025-02-10 08:56 IST

கட்டாக்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 300+ ரன்கள் அடித்து தோல்வியை சந்திப்பது இது 28-வது முறையாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 300+ ரன்கள் அடித்து தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. இங்கிலாந்து - 28 முறை

2. இந்தியா - 27 முறை

3. வெஸ்ட் இண்டீஸ் - 23 முறை

4. இலங்கை - 19 முறை 

Tags:    

மேலும் செய்திகள்