ஐ.பி.எல்.: டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கம்

டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-07-13 14:56 GMT

image courtesy: PTI

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங், ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 7 சீசன்களாக பணியாற்றி வந்தார்.

இவரது தலைமையின் கீழ் டெல்லி அணி சிறப்பாக செயல்பாடுகளை வெளிப்படுத்திய போதிலும், கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும் கடந்த 3 சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.

இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பாண்டிங்கை நீக்குவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி அணி நிர்வாகம், தனது எக்ஸ் பக்கத்தில், "7 சீசன்களுக்குப் பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் ரிக்கி பாண்டிங்கை விட்டு விலக முடிவு செய்துள்ளது.

இது ஒரு சிறந்த பயணம், பயிற்சியாளர்! எல்லாவற்றிற்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்